கூகுள் ஜெமினி விவகாரம் - இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட கூகுள்

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாதனம் ஜெமினி ஆகும். இது நம்பத் தகுந்தது அல்ல என்பதாக குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடியிடம் கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஜெமினி சாதனத்திடம் பிரதமரை குறித்த கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. இதற்கு சர்ச்சைக்குரிய பதில்களை ஜெமினி வழங்கி உள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு இந்திய அரசு சார்பில் கூகுள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, ஜெமினி தளம் நம்பத் தகுந்தது அல்ல என குறிப்பிட்டு, கூகுள் மன்னிப்பு […]

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாதனம் ஜெமினி ஆகும். இது நம்பத் தகுந்தது அல்ல என்பதாக குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடியிடம் கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் ஜெமினி சாதனத்திடம் பிரதமரை குறித்த கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. இதற்கு சர்ச்சைக்குரிய பதில்களை ஜெமினி வழங்கி உள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு இந்திய அரசு சார்பில் கூகுள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, ஜெமினி தளம் நம்பத் தகுந்தது அல்ல என குறிப்பிட்டு, கூகுள் மன்னிப்பு கேட்டுள்ளது. இந்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எடுத்த நடவடிக்கையின் பெயரில் கூகுள் இதனை தெரிவித்துள்ளது. இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவில் பல்வேறு சர்ச்சைகளை ஜெமினி ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, சுந்தர் பிச்சை பதவி விலகலாம் என்ற வதந்தியும் ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu