கூகுள் ஜெனரேட்டிவ் ஏஐ - இன்று முதல் இந்தியாவில் அறிமுகம்

இந்திய பயனர்களுக்கு, இன்று முதல் கூகுள் ஜெனரேட்டிவ் ஏஐ அம்சம் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலையில், கூகுள் குரோம் டெஸ்க்டாப்பில் இந்த அம்சம் வெளியாகி உள்ளது. விரைவில், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இந்த அம்சம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் தேடுபொறியில், பயனர்களின் தேடல், கூகுள் ஜெனரேட்டிவ் ஏஐ மூலம் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் சர்ச் லேப்ஸ் பகுதியில் இந்த அம்சம் வெளியாகியுள்ளது. சாதாரண கூகுள் தேடலில் பதில் கிடைக்காத கேள்விகளுக்கு, கூகுள் லேப்ஸ் […]

இந்திய பயனர்களுக்கு, இன்று முதல் கூகுள் ஜெனரேட்டிவ் ஏஐ அம்சம் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலையில், கூகுள் குரோம் டெஸ்க்டாப்பில் இந்த அம்சம் வெளியாகி உள்ளது. விரைவில், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இந்த அம்சம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் தேடுபொறியில், பயனர்களின் தேடல், கூகுள் ஜெனரேட்டிவ் ஏஐ மூலம் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் சர்ச் லேப்ஸ் பகுதியில் இந்த அம்சம் வெளியாகியுள்ளது. சாதாரண கூகுள் தேடலில் பதில் கிடைக்காத கேள்விகளுக்கு, கூகுள் லேப்ஸ் ல், ஜெனரேட்டிவ் ஏஐ மூலம் பதில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், பயனர்களின் குறிப்பிட்ட தேடலுடன் தொடர்புடைய பல்வேறு கூடுதல் தகவல்களை இந்த அம்சம் வெளியிடும் என கூறப்பட்டுள்ளது. தற்போது, இது சோதனை அடிப்படையில் வெளியாகி உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. labs.google.com/search தளத்தில், SGE என்ற ஆப்ஷனை ஆன் செய்யும் பட்சத்தில், பயனர்களுக்கு ஜெனரேட்டிவ் ஏஐ பதில்கள் கிடைக்கப்பெறும் என கூகுள் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu