கூகிள் நிறுவனம் ஆனது பைதான் ப்ரோக்ராமிங் குழுவை முழுமையாக பணி நீக்கம் செய்துள்ளது.
கூகிள் நிறுவனம் கடந்த சில நாட்களாக ஆட்குறைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் ஹார்ட்வேர்ட் குழு, உதவி பொறியாளர்கள், பொறியாளர்கள் குழுவில் பணி நீக்கம் நடைபெறுகிறது. அந்த வகையில் தற்போது பைதான் குழுவை முழுமையாக பணி நீக்கம் செய்துள்ளது. தலைமை பொறுப்பு முதல் ஊழியர்கள் வரை அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதிக ஊதியம் வழங்க வேண்டி இருப்பதால் அவர்களை பணிநீக்கம் செய்துவிட்டு குறைந்த ஊதியத்தில் பணியாளர்களை எடுக்கும் நோக்கத்தில் அந்த நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. கூகிள் நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் பைத்தான் குழுவினர் அங்கு பணி செய்து வருகின்றனர்.
கூகுள் தலைமை இடத்தில் 10 பேருக்கும் குறைவானவர்கள் பைதான் குழுவில் உள்ளனர். அவர்களை மையமாக வைத்து பைதான் இயங்குகிறது. ஆயிரக்கணக்கான மூன்றாம் தர ஒப்பந்த ஊழியர்கள் மூலம் இப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது குறைந்த ஊதியத்தில் ஜெர்மனி ஊழியர்களை பணியில் அமர்த்த போவதாக ஊடகங்கள் கூறுகின்றன.