இந்தியாவில் தயாரிக்கும் கைபேசிகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்ய கூகுள் திட்டம்

July 5, 2024

இந்தியாவில் தயாரிக்கப்படும் கூகுள் பிக்சல் கைபேசிகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சோதனை அடிப்படையில் ஏற்றுமதிக்கான கூகுள் பிக்சல் கைபேசி உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கூகுள் பிக்சல் கைபேசிகள் உற்பத்தியை இந்தியாவை சேர்ந்த டிக்சான் நிறுவனமும், தைவானின் பாக்ஸ்கான் நிறுவனமும் இணைந்து மேற்கொள்கின்றன. அடிப்படை வசதிகள் கொண்ட பிக்சல் கைபேசியை டிக்சான் நிறுவனமும், நவீன வசதிகள் கொண்ட அல்லது ப்ரோ எனப்படும் கைபேசி மாடல்களை பாக்ஸ்கான் நிறுவனமும் […]

இந்தியாவில் தயாரிக்கப்படும் கூகுள் பிக்சல் கைபேசிகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சோதனை அடிப்படையில் ஏற்றுமதிக்கான கூகுள் பிக்சல் கைபேசி உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கூகுள் பிக்சல் கைபேசிகள் உற்பத்தியை இந்தியாவை சேர்ந்த டிக்சான் நிறுவனமும், தைவானின் பாக்ஸ்கான் நிறுவனமும் இணைந்து மேற்கொள்கின்றன. அடிப்படை வசதிகள் கொண்ட பிக்சல் கைபேசியை டிக்சான் நிறுவனமும், நவீன வசதிகள் கொண்ட அல்லது ப்ரோ எனப்படும் கைபேசி மாடல்களை பாக்ஸ்கான் நிறுவனமும் தயாரிக்க உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பிக்சல் கைபேசிகளுக்கு அதிக வரவேற்பு இல்லை என்பதால் பெரும்பாலான கைபேசிகள் ஏற்றுமதிக்காகவே தயாரிக்கப்படுகின்றது. வரும் செப்டம்பர் முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் கூகுள் பிக்சல் கைப்பேசிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu