ஜிமெயிலில் ப்ளூடிக் அம்சம் - கூகுள் அறிவிப்பு

கூகுள் நிறுவனம், ஜிமெயில் தளத்தில் ப்ளூடிக் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், கூகுள் நிறுவனத்தின் BIMI (Brand Indicators for Message Identification) பெற்றவர்களுக்கு, ப்ளூடிக் கொடுக்கப்படுகிறது. அதாவது, கூகுள் நிறுவனம், ஆவணங்களை சரிபார்த்து, பயனர்களுக்கு இந்த ப்ளூ டிக்கை வழங்குகிறது. எனவே, தங்களுக்கு வரும் மின்னஞ்சல், அதிகாரப்பூர்வ கணக்குகளில் இருந்து வருகிறதா என்பதை பயனர்கள் சரிபார்த்துக் கொள்ள முடியும். எனவே, மோசடியில் ஈடுபவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். அத்துடன், தேவையில்லாத […]

கூகுள் நிறுவனம், ஜிமெயில் தளத்தில் ப்ளூடிக் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், கூகுள் நிறுவனத்தின் BIMI (Brand Indicators for Message Identification) பெற்றவர்களுக்கு, ப்ளூடிக் கொடுக்கப்படுகிறது. அதாவது, கூகுள் நிறுவனம், ஆவணங்களை சரிபார்த்து, பயனர்களுக்கு இந்த ப்ளூ டிக்கை வழங்குகிறது. எனவே, தங்களுக்கு வரும் மின்னஞ்சல், அதிகாரப்பூர்வ கணக்குகளில் இருந்து வருகிறதா என்பதை பயனர்கள் சரிபார்த்துக் கொள்ள முடியும். எனவே, மோசடியில் ஈடுபவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். அத்துடன், தேவையில்லாத மின்னஞ்சல்களை பார்ப்பதை தவிர்க்க முடியும். நிறுவனங்கள், பயனர்களுக்கு தங்கள் முகவரி மீதான நம்பிக்கையை இதன் மூலம் பெற முடியும். நிறுவனங்களின் பெயரில் இயங்கும் போலி கணக்குகள் பிரச்சனைக்கு இதன் மூலம் தீர்வு கிடைக்கும்.

கூகுள் நிறுவனத்தின் வலைப்பக்கத்தில் இது குறித்த அறிவிப்பு நேற்று வெளிவந்துள்ளது. அதில், இந்த அம்சத்தை விளக்கும் வகையில் ஸ்கிரீன் ஷாட் இடம் பெற்றுள்ளது. அதன்படி, இன்னும் 3 தினங்களில் வணிகப் பயனர்கள் மற்றும் கூகுள் வொர்க் ஸ்பேஸ் வாடிக்கையாளர்களுக்கு இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது. ப்ளூ டிக் அம்சத்தை பெற விரும்பும் பயனர்கள், BIMI இயங்குதளத்தில் தங்கள் பிராண்ட் லோகோவை சரி பார்க்க வேண்டும். அதன் பின்னர், கூகுள் தரவுகள் சரிபார்க்கப்பட்டு, ப்ளூ டிக் வழங்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu