ப்ளூ ஒரிஜினின் விண்வெளி சுற்றுலாவில் இடம்பெறும் முதல் இந்தியர்

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், ப்ளூ ஒரிஜின் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் விண்வெளி சுற்றுலா செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ப்ளூ ஒரிஜின் நிறுவனம் சார்பில் விண்வெளி சுற்றுலாவில் இடம்பெறும் முதல் இந்தியராக கோபிசந்த் தோட்டகுரா வரலாறு படைக்கிறார். கோபிசந்த் தோட்டகுரா, ப்ளூ ஒரிஜினின் நியூ ஷெப்பர்ட் 25 திட்டத்தின் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். தொழிலதிபரும் விமானியமான இவர், இந்தியாவின் முதல் விண்வெளி சுற்றுலா வீரராக வரலாறு படைக்கிறார். ஆந்திர […]

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், ப்ளூ ஒரிஜின் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் விண்வெளி சுற்றுலா செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ப்ளூ ஒரிஜின் நிறுவனம் சார்பில் விண்வெளி சுற்றுலாவில் இடம்பெறும் முதல் இந்தியராக கோபிசந்த் தோட்டகுரா வரலாறு படைக்கிறார்.

கோபிசந்த் தோட்டகுரா, ப்ளூ ஒரிஜினின் நியூ ஷெப்பர்ட் 25 திட்டத்தின் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். தொழிலதிபரும் விமானியமான இவர், இந்தியாவின் முதல் விண்வெளி சுற்றுலா வீரராக வரலாறு படைக்கிறார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள விஜயவாடாவை சேர்ந்த இவர், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். ராகேஷ் சர்மாவுக்கு பிறகு விண்வெளிக்கு செல்லும் இரண்டாம் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற உள்ளார். ப்ளூ ஒரிஜின் சார்பில் இது 25வது விண்வெளி பயணம் ஆகும். மேலும், 7 வது முறையாக மனிதர்களை சுமந்து செல்லும் பயணம் ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu