ரத்த அழுத்தம், நீரிழிவுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் உட்பட 69 மருந்துகளுக்கு விலை உச்சவரம்பை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.
அதில் இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் அதிக ரத்த அழுத்தத்திற்கு பயன்படும் சிடாகிளிப்டிங் மற்றும் மெட்பார்மின் ஹைட்ரோகுளோரைடு மாத்திரை விலை ரூ.13.25 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உயர் ரத்த அழுத்தத்துக்கு பயன்படுத்தப்படும் ஓல்மெசர்தன் மெடாக்சோமில், அம்லோடைபைன் (5எம்ஜி) மற்றும் ஹைட்ரோகுளோரோதையாசைடு மாத்திரை விலை 8.92 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல் 69 வகையான மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி நீங்கலாக அரசு நிர்ணயிக்கும் விலை தான் அதிகபட்ச சில்லறை விலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மருந்துகள் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்யப்பட்டால் கூடுதல் தொகையை சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் வட்டியுடன் சேர்த்து டெபாசிட் செய்ய வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.