பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் 93 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு கவர்னர் பட்டம் வழங்கினார்.
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக வேந்தர் ஆர். என். ரவி தலைமை தாங்கினர். இதில் 1382 பிஹெச்டி பட்டமும், 334 எம்.பில் பட்டமும் வழங்கப்பட்டது.
இது தவிர 10,958 பேர் கலை பாட பிரிவிலும், 16,907 பேர் சமூக அறிவியல் பாடப் பிரிவிலும், 36,856 பேர் அறிவியல் பாடப் பிரிவுகளிலும், 846 பேர் கல்வியியல் பாட பிரிவுகளிலும், 27469 பேர் வணிகவியல் பிரிவிலும் என மொத்தம் 93 ஆயிரத்து 36 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.