மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த இவர், பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் ஆவார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவர் மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக செயல்படுவார் என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக வங்கி சார் நிர்வாகி பிரிவில் மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த எம் கே ஜெயினின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, சுவாமிநாதன் ஜானகிராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தில் உள்ள கும்பகோணத்தில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை நிறைவு செய்தவர் ஆவார். அதன் பின்னர், மும்பையில் உள்ள இந்திய வங்கி நிதி சார் மையத்தில் நிதித்துறை சார்ந்த நிபுணத்துவ சான்றிதழ் படிப்பை பூர்த்தி செய்துள்ளார். மேலும், லண்டனில் உள்ள ஐ எஃப் எஸ் ஸ்கூல் ஆப் பைனான்ஸ் -ல் சான்றிதழ் படிப்பு நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.