கிரீஸில் 6 நாட்கள் வேலை - புதிய சட்டம்

July 6, 2024

கிரீஸ் நாட்டில் வாரத்திற்கு ஆறு நாட்கள் பணி நாட்களாக அனுமதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட சில தொழிற்சாலைகள் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கவும், வாரத்தில் ஏழு நாட்கள் பணியாற்றவும், சிலவற்றிற்கு ஆறு நாட்கள் பணியாற்றவும் அனுமதி வழங்கும் சட்டம் கிரீஸ் நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அது திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கும் வந்துள்ளது. கிரீஸில் உள்ள பழமையான தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டின் நிலைப்பாடு பிற […]

கிரீஸ் நாட்டில் வாரத்திற்கு ஆறு நாட்கள் பணி நாட்களாக அனுமதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

குறிப்பிட்ட சில தொழிற்சாலைகள் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கவும், வாரத்தில் ஏழு நாட்கள் பணியாற்றவும், சிலவற்றிற்கு ஆறு நாட்கள் பணியாற்றவும் அனுமதி வழங்கும் சட்டம் கிரீஸ் நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அது திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கும் வந்துள்ளது. கிரீஸில் உள்ள பழமையான தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டின் நிலைப்பாடு பிற உலக நாடுகளின் நிலைப்பாடுகளுக்கு எதிராக உள்ளது.

ஐஸ்லாந்து, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனையில் உள்ளது. இந்நிலையில் இத்தகைய சட்டம் அங்கு இயற்றப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டில் தற்போது திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறை உள்ளது என்றும் அதனாலேயே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி கூடுதலாக பணியாற்றும் ஆறாவது நாளுக்கு நாற்பது சதவீதம் ஊதியத்தை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சட்டம் அவசர காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், வாரத்தில் ஐந்து வேலை நாட்கள் என்ற கொள்கை ஒருபோதும் பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu