கிரீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி தென்னாபிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு பல நாட்டு தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் தென் ஆப்பிரிக்காவின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். கிரீஸ் நாட்டில் ஏதேன்ஸ் நகருக்கு சென்ற அவர் அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி ஜார்ஜ் ஜெரோபெட்ரிக்ஸ் மற்றும் கிரீஸ் நாட்டு அதிபர்,பிரதமர் ஆகியோரை சந்தித்தார். அப்போது அங்கு "கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்" என்ற கிரீஸ் நாட்டின் உயரிய விருதை அந்நாட்டு அதிபர் கேத்தரினா வழங்கி கௌரவித்தார்.
இது குறித்து, இந்த விருது கிரீஸ் நாட்டு மக்கள் இந்தியாவின் மீது வைத்துள்ள மரியாதையின் அடையாளம் என்றும் இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று தெரிவித்தார்.