ஐரோப்பிய நாடான கிரீசின் சாண்டோரினி தீவில் கடலுக்கு அடியில் கடந்த 3 நாட்களில் 200-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கங்களுக்கு பின், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். பாதுகாப்பு நடவடிக்கையாக, அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீவின் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்படும் ஆபத்தை குறைக்கும் வகையில், அரசின் வழிகாட்டுதல்களை தீவிரமாக கடைபிடிக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளர்.