உக்ரைன் விமானிகளுக்கு எப்-16 ஜெட் விமானங்களை இயக்க கிரீஸ் நாடு பயிற்சி அளிக்கவுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா இடையே 17 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைன் மிக்- 29, சுகோய் ஜெட் போன்ற பழைய விமானங்களை பயன்படுத்துகிறது. இது ரஷ்ய தயாரிப்பு ஆகும். போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்கரேனுக்கு ஆயுத உதவி செய்து வருகின்றன. மேலும் உக்கரைனுக்கு போர் விமானங்களை வழங்க பல்வேறு நாடுகளை அதிபர் ஜலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அதோடு உக்ரைன் நாட்டு போர் திறனை அதிகரிக்க எஃப் 16 என்ற அதிநவீன போர் விமானங்களை வாங்க உக்ரைன் முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து நெதர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகளிடம் உக்ரைன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இந்நாடுகள் எஃப் -16 விமானங்களை வழங்க முடிவு செய்துள்ளது. எனினும், எஃப்16 போர் விமானங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை ஆகும். எனவே இதற்கு அமெரிக்க ஒப்புதல் அவசியம். அமெரிக்கா இதற்கு ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்திருந்த எஃப்16 விமானங்களை பிற நாடுகளுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு இந்த விமானங்களை இயக்க பயிற்சி அளிப்பதற்கு கிரீஸ் நாடு முன்வந்துள்ளது என உக்கரை அதிபர் ஜலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த பயிற்சியை 11 நாடுகளின் கூட்டணிஇந்த மாதம் தொடங்க உள்ளது. வரும் ஜனவரி மாதம் விமானிகள் தயாராகி விடுவார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.