ஆர்டிக் பிரதேசத்தில் உள்ள கிரீன்லாந்து நாடு பனிப்பாறைகளால் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், இங்குள்ள பனிப்பாறைகள் ஒரு மணி நேரத்துக்கு 30 மில்லியன் டன் அளவு சுருங்குவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தை விட 3 மடங்கு அதிகமான பரப்பளவு கொண்ட கிரீன்லாந்து பகுதியில், ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட 20 மடங்கு வேகமாக பனிப்பாறைகள் உருகி வருவதாக தெரியவந்துள்ளது. புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வரும் சூழலில், பனிப்பாறைகள் வேகமாக சுருங்குவது அபாயகரமானதாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விரிவான ஆய்வறிக்கை நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையோடு, கடந்த 38 வருட தகவல்களை பகுப்பாய்வு செய்ததில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.