தமிழகத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இந்த ஆண்டு மளிகை பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இது சென்னையில் ஒப்பிடும்பொழுது பிப்ரவரி மாத விலையுடன் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு காரணமாக அரிசி உற்பத்தி குறைந்து வெளி மாநிலங்கள் இருந்து அரிசி கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் அரிசி விலை உயர்ந்துள்ளது. மேலும் துவரம்பருப்பு கிலோவுக்கு ரூபாய் 20 வரை உயர்ந்துள்ளது. இவை தவிர மஞ்சள் தூள், உளுந்தம் பருப்பு,பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு,உடைத்த கடலை, கொண்டைக்கடலை, கருப்பு கொண்டை கடலை உள்ளிட்ட அனைத்து மளிகை பொருட்களின் விளையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. மளிகை பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில் சமையல் எண்ணெய் விலை மட்டும் மாற்றம் ஏதும் இன்றி உள்ளது.