செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான தேர்வின் விடைக்குறிப்பு செப்டம்பர் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான ஆட்சேபனைகளை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த தேர்வின் முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்மைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.