கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்தியாவின் ஜிஎஸ்டி வரி வசூலில் வரலாற்று உச்சம் பதிவாகி உள்ளது. மொத்தமாக, ஏப்ரல் மாதத்தில், சரக்கு மற்றும் சேவை வரி 187035 கோடியாக பதிவாகியுள்ளது. இதில், மத்திய ஜிஎஸ்டி 38440 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி 47412 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 89158 கோடியாகவும் பதிவாகியுள்ளது. மேலும், இறக்குமதி பொருட்கள் மூலம் வசூல் ஆன ஜிஎஸ்டி வரி 34972 கோடியாகவும், செஸ் வரி 12025 கோடி ஆகவும் பதிவாகியுள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன. மேலும், ஜிஎஸ்டி வரி அமல் செய்யப்பட்ட மாதம் முதல் இப்போது வரை, 1.75 லட்சம் கோடியை தாண்டி, வரி வசூல் ஆவது இதுவே முதல் முறை என கூறியுள்ளது. அத்துடன், வருடாந்திர அடிப்படையில், ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூல் 12% உயர்வு என தெரிவித்துள்ளது.