கடந்த ஜூன் மாதத்தில், 47வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், சூதாட்ட விடுதிகள், ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் ஆகியவை குறித்து அமைச்சர்கள் குழு முடிவுக்கு வராததை அடுத்து கூட்டம் நடைபெறவில்லை.
முந்தைய கூட்டத்தில், அமைச்சர்கள் குழுவின் அறிக்கையில் சூதாட்ட விடுதிகள், ஆன்லைன் கேமிங் மற்றும் குதிரைப் பந்தயம் போன்றவற்றுக்கு 28 சதவீதம் வரி விதிக்கலாம் என தெரிவிக்கபட்டிருந்தது. ஆனால், கோவா மாநில நிதியமைச்சர் மவ்வின் கோடின்ஹோ இதற்கு சம்மதிக்காத நிலையில், இது குறித்து மேலும் ஆலோசிக்க அவகாசம் வழங்கப்படுவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கவுன்சில் கூட்டம், அடுத்த மாதம் மத்தியில் நடைபெறும் என்றும், இக்கூட்டத்தின் முக்கிய அம்சமாக சூதாட்ட விடுதிகளுக்கான வரி உள்ளிட்டவை இருக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.