சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு வெளியீடு

August 25, 2023

குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை தமிழக பத்திரப்பு பதிவு துறை சீரமைத்து அறிவித்துள்ளது. தமிழக பத்திர பதிவுத்துறை எந்தெந்த மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து பகுதிகளில் வழிகாட்டி மதிப்புகளை சீரமைத்து அனைத்து பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சி, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் சதுர அடிக்கு குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பாக ரூபாய் ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அந்தந்த ஏரியாவிற்கு தகுந்த மாதிரி மாற்றம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பாக […]

குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை தமிழக பத்திரப்பு பதிவு துறை சீரமைத்து அறிவித்துள்ளது.

தமிழக பத்திர பதிவுத்துறை எந்தெந்த மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து பகுதிகளில் வழிகாட்டி மதிப்புகளை சீரமைத்து அனைத்து பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சி, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் சதுர அடிக்கு குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பாக ரூபாய் ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அந்தந்த ஏரியாவிற்கு தகுந்த மாதிரி மாற்றம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பாக ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம் ஆகிய மாநகராட்சிகளில் ரூபாய் 800 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏரியாவுக்கு ஏற்றவாறு ரூபாய் 300 ஆகவும் இருக்கின்றன. அதேபோல் ஈரோடு,திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவில், ஆகிய பகுதிகளில் சதுர அடிக்கு ரூபாய் 200 ஆகவும், திருநெல்வேலி, கரூர்,வேலூர், திண்டுக்கல் மாநகராட்சிகளில் சதுர அடிக்கு ரூபாய் 600 ஆகவும், தூத்துக்குடி, தஞ்சாவூர், சிவகாசி, கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் 500 ஆகவும், கடலூர் மாநகராட்சியில் ரூபாய் 300 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நகராட்சி பகுதிகளில் சதுரடி ரூபாய் 300 ஆகவும்z பேரூராட்சி பகுதியில் 200 ஆகவும் நிர்ணயத்துள்ளனர்
மேலும் சில கிராமம் மாவட்டங்களில் உள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கு வீட்டு மனைகளுக்கு ரூபாய் 100,50 ஆகவும், விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு 5 லட்சம்,2 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்திரப்பதிவு கட்டணம் 11 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu