ஈக்வடார் - தொலைக்காட்சி நேரலையில் துப்பாக்கியுடன் புகுந்து தாக்குதல்

January 10, 2024

ஈகுவடார் நாட்டில் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பின் போது துப்பாக்கியுடன் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈக்வடார் நாட்டில் போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கடத்தல் கும்பலின் முக்கிய நபர்கள் இருவர் சில நாட்களுக்கு முன் சிறையில் இருந்து தப்பித்தனர். இதனால், கடந்த திங்கட்கிழமை அன்று, நாடு முழுவதும் 60 […]

ஈகுவடார் நாட்டில் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பின் போது துப்பாக்கியுடன் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈக்வடார் நாட்டில் போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கடத்தல் கும்பலின் முக்கிய நபர்கள் இருவர் சில நாட்களுக்கு முன் சிறையில் இருந்து தப்பித்தனர். இதனால், கடந்த திங்கட்கிழமை அன்று, நாடு முழுவதும் 60 நாட்கள் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த இரு தினங்களில், பல்வேறு இடங்களில் போதைப் பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பின் போது, துப்பாக்கி ஏந்திய கடத்தல் கும்பல் காரர்கள் ஊழியர்களை தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து தொலைக்காட்சி ஊழியர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu