இந்திய கால்பந்து அணிக்கு கேப்டனாக குர்ப்ரீத் சிங் நியமனம்

இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக கோல்கீப்பர் குர்ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 2026 ஆம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் ' பிபா ' உலகக்கோப்பை கால்பந்து ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆசிய பிரிவு இரண்டாவது கட்டத் தகுதி சுற்றில் இந்திய அணி ஏ பிரிவில் உள்ளது. அதில் குவைத், கத்தார், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களை பெறும் அணி மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெறும். […]

இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக கோல்கீப்பர் குர்ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் 2026 ஆம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் ' பிபா ' உலகக்கோப்பை கால்பந்து ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆசிய பிரிவு இரண்டாவது கட்டத் தகுதி சுற்றில் இந்திய அணி ஏ பிரிவில் உள்ளது. அதில் குவைத், கத்தார், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களை பெறும் அணி மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெறும். அவ்வகையில் இந்திய அணி இதுவரை மோதியதில் 5 போட்டியில் ஐந்து புள்ளி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் கத்தார் மற்றும் கடைசி இரு இடங்களில் ஆப்கானிஸ்தான் மற்றும் குவைத் அணிகள் உள்ளன. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த சுனில் சேத்ரி அவரது ஓய்வு முடிவை அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக கோல் கீப்பர் குர்ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவிற்காக 72 போட்டிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu