சூடானில் ஸ்டார்லிங்க் இணைப்பை ஏற்படுத்த, எக்ஸ் தளத்தை குறிவைக்கும் ஹேக்கர்கள்

September 4, 2023

கடந்த செவ்வாய்க்கிழமை, 12 க்கும் அதிகமான நாடுகளில் எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) சமூக தள சேவை முடங்கியது. இதன் பின்னணியில் சூடானைச் சேர்ந்த ஹேக்கர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்கள் சூடான் நாட்டில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையதள சேவையை எலான் மஸ்க் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி இத்தகைய செயலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘அனானிமஸ் சூடான்’ என்ற பெயரில் அந்த ஹேக்கர் குழு அறியப்படுகிறது. எக்ஸ் சேவை முடக்கப்பட்டதை குறித்து, டெலிகிராம் வாயிலாக எலான் […]

கடந்த செவ்வாய்க்கிழமை, 12 க்கும் அதிகமான நாடுகளில் எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) சமூக தள சேவை முடங்கியது. இதன் பின்னணியில் சூடானைச் சேர்ந்த ஹேக்கர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்கள் சூடான் நாட்டில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையதள சேவையை எலான் மஸ்க் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி இத்தகைய செயலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘அனானிமஸ் சூடான்’ என்ற பெயரில் அந்த ஹேக்கர் குழு அறியப்படுகிறது.

எக்ஸ் சேவை முடக்கப்பட்டதை குறித்து, டெலிகிராம் வாயிலாக எலான் மஸ்க்குக்கு ஹேக்கர் குழு தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவலில், ‘ஓபன் ஸ்டார் லிங்க் இன் சூடான்’ என்ற செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலான் மஸ்க் தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. எக்ஸ் தளத்தை குறிப்பிட்டு நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல் வாயிலாக, அனானிமஸ் சூடான் ஹேக்கர் குழு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக, மைக்ரோசாப்ட் தளங்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலிலும் இதே ஹேக்கர் குழு ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu