ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியலில், ரூ. 7,300 கோடி சொத்து மதிப்புடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உள்ள பங்கு ஆகியவை இவரது சொத்து மதிப்பை அதிகரித்துள்ளது.
இவரது சொத்து மதிப்பு, பாலிவுட் பிரபலங்களான ஜூஹி சாவ்லா மற்றும் குடும்பம் (ரூ. 4,600 கோடி), ரித்திக் ரோஷன் (ரூ. 2,000 கோடி), அமிதாப் பச்சன் மற்றும் குடும்பம் (ரூ. 1,600 கோடி) மற்றும் கரண் ஜோஹர் (ரூ. 1,400 கோடி) ஆகியோரின் சொத்து மதிப்பை விட அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.