ஹைட்டியில் வன்முறை - அவசரநிலை பிரகடனம்

March 6, 2024

ஹைட்டியில் வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஹைட்டி கரிபியன் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகர் போர்டு பிரின்ஸ். இந்நகரின் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகளை வன்முறை கும்பல் ஒன்று கைப்பற்றியுள்ளது. இதற்கிடையே கடந்த சனிக்கிழமை இரவு மத்திய சிறையில் அதிரடி தாக்குதல் நடத்திய ஓர் ஆயுத குழு 3798 விசாரணை கைதிகளை விடுவித்துள்ளது. மேலும் இன்னொரு சிறையில் மற்றொரு கும்பல் தாக்குதல் நடத்தி 153 கைதிகளை விடுவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தலைநகர் […]

ஹைட்டியில் வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ஹைட்டி கரிபியன் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகர் போர்டு பிரின்ஸ். இந்நகரின் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகளை வன்முறை கும்பல் ஒன்று கைப்பற்றியுள்ளது. இதற்கிடையே கடந்த சனிக்கிழமை இரவு மத்திய சிறையில் அதிரடி தாக்குதல் நடத்திய ஓர் ஆயுத குழு 3798 விசாரணை கைதிகளை விடுவித்துள்ளது. மேலும் இன்னொரு சிறையில் மற்றொரு கும்பல் தாக்குதல் நடத்தி 153 கைதிகளை விடுவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தலைநகர் போட்டோவில் முக்கிய அரசு கட்டிடங்களில் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் நகரில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் இந்த கும்பல் கொண்டு வந்துள்ளது. இந்த நகரில் உள்ள சர்வதேச நிலையத்தை கைப்பற்றவும் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் அரசு படையினர் எதிர் தாக்குதல் நடத்தி முறியடித்தனர். இந்த வன்முறையை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அந்நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu