வெப்ப தாக்கத்திற்கு ஹஜ் பயணிகள் 19 பேர் பலி

June 18, 2024

சவுதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட யாத்திரிகர்கள் 19 பேர் வெப்ப அலை காரணமாக பலியாகினர். ஜோர்டான் வெளியூர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது, ஜோர்டானிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக சவுதி அரேபியா சென்றிருந்த 14 பேர் வெப்பம் தாங்க முடியாமல் பலியாகி உள்ளனர். இது தவிர மேலும் 17 ஜோர்டான் நாட்டு மக்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே வெப்ப அலை காரணமாக ஈரானை சேர்ந்த […]

சவுதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட யாத்திரிகர்கள் 19 பேர் வெப்ப அலை காரணமாக பலியாகினர்.

ஜோர்டான் வெளியூர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது, ஜோர்டானிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக சவுதி அரேபியா சென்றிருந்த 14 பேர் வெப்பம் தாங்க முடியாமல் பலியாகி உள்ளனர். இது தவிர மேலும் 17 ஜோர்டான் நாட்டு மக்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே வெப்ப அலை காரணமாக ஈரானை சேர்ந்த ஹஜ் பயணிகள் 5 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு சாத்தான் மீது கல் எறியும் நிகழ்வில் மட்டும் 18 லட்சம் பேர் பங்கேற்கின்றனர் என்று சவுதி அரேபிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu