தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு கடந்த 12-ம் தேதி தொடங்கி இன்று முடிவடைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டங்களில் கன மழை பாதிப்புகளால் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. அதேபோன்று தென்மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களிலும் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. மற்ற பள்ளிகளில் தேர்வுகள் இன்று முடிந்துள்ள நிலையில் அவர்களுக்கான அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஆனது 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை 9 நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.