சூரியன் ஒவ்வொரு 11 வருடங்களுக்கும் சுழற்சி முறையில் செயல்படுகிறது. தற்போதைய 11 வருட சுழற்சி உச்சத்தை எட்டி உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நிலையில், அடுத்த 11 வருட சுழற்சிக்கான நடவடிக்கைகள் சூரியனில் தொடங்கியுள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சூரியனின் தற்போதைய 11 வருட சுழற்சி காலம் தொடங்கியது. இதை சைக்கிள் 25 என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இது முழுமையாக நிறைவு பெறுவதற்கு அடுத்த ஆறு ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில், அடுத்து நிகழ இருக்கும் சைக்கிள் 26 சுழற்சிக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் சூரியனில் தென்பட்டுள்ளது எனவும் அடுத்த சுழற்சி வரும் 2030 ஆம் ஆண்டு தொடங்கும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.