ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தது

March 27, 2024

இஸ்ரேல் முக்கிய கோரிக்கையை நிராகரித்ததால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றனர். கத்தார், எகிப்து, அமெரிக்கா போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றனர். ஐநா சபை இதனையே வலியுறுத்தி வருகிறது. இதற்காக ஐநா சபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் நிராகரித்துள்ளனர். காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முழுமையாக வெளியேறுதல், போரால் […]

இஸ்ரேல் முக்கிய கோரிக்கையை நிராகரித்ததால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றனர். கத்தார், எகிப்து, அமெரிக்கா போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றனர். ஐநா சபை இதனையே வலியுறுத்தி வருகிறது. இதற்காக ஐநா சபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் நிராகரித்துள்ளனர். காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முழுமையாக வெளியேறுதல், போரால் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கள் பகுதிக்கு திரும்புதல், கைதிகளை பரிமாறிக் கொள்ளுதல் போன்ற முக்கிய கொள்கைகளுக்கு இஸ்ரேல் சரியான பதில் அளிக்கவில்லை என ஹமாஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதனாலேயே போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்ததாக அது கூறியுள்ளது. அதே சமயத்தில் ஹமாசின் கோரிக்கைகள் மாய பிம்பம் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார். பழைய கைதிகள் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினரை முழுமையாக அழிக்கும் வரை காசாவில் தாக்குதல் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu