அமெரிக்காவில் கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
அரிசோனா மாகாணம் டெம்பேவில் உள்ள கமலா ஹாரிஸ் பிரச்சார அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகம் மீது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். சம்பவம் நடந்ததும் போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். துப்பாக்கிச்சூடு நடந்தபோது அலுவலகத்தில் யாரும் இல்லை. ஆனால் சுவர்களில் தோட்டாக்களால் சேதம் ஏற்பட்டுள்ளது. முன்பக்க ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக அலுவலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, அப்பகுதியில் பாதுகாப்பு வலுப்படுத்துவதற்கான கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.