உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய அரியளவை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்
ஹரியானாவை சேர்ந்த இளைஞர் ரவி மவுன் உக்ரைன் போரில் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றி வந்தார் இவருடைய வயது 22. இவர் குறித்த தகவல் கிடைக்காததால் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை அவரது குடும்பத்தினர் தொடர்பு கொண்டனர். இந்நிலையில் ரவி மவுன் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. அவர் வீரர்கள் பதுங்குவதற்காக சுரங்கங்கள் தோன்றும் பணியில் ஈடுபட்டு வந்தார். பின்னர் நேரடி போர் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டார். இல்லையேல் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அவர் மிரட்டப்பட்டார் என்று அவருடைய குடும்பத்தார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ரஷ்ய இராணுவத்தின் துணை பணிகளில் இந்தியர்கள் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது குறித்து பிரதமர் மோடி அதிபர் புதினிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதை அடுத்து ராணுவத்தில் பணிபுரியும் இந்தியர்களை விரைவில் வெளியேற்றுவதாக ரஷ்ய உறுதி அளித்தது.