பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச் சி எல் டெக் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி, முந்தைய ஆண்டை விட 0.35% கூடுதலாக 3995 கோடி அளவில் ஹெச் சி எல் டெக் நிறுவனத்தின் நிகர லாபம் பதிவானது. மேலும், நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் 5.3% உயர்ந்து 28499 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, 2025 ஆம் நிதி ஆண்டில், நிறுவனத்தின் ஒரு பங்குக்கு 18 ரூபாய் இடைக்கால டிவிடெண்ட் வழங்க ஹெச் சி எல் டெக் நிர்வாகக் குழு பரிந்துரை செய்துள்ளது.
காலாண்டு நிதிநிலை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே உள்ளது. ஆனால், எதிர்கால திட்டங்களை கணக்கிட்டு நிறுவனத்தின் பங்குகள் சரிந்து வருகின்றன. இன்றைய காலை நேர வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 6% அளவுக்கு ஹெச் சி எல் டெக் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இன்றைய வர்த்தக நாளின் போது, ஹெச் சி எல் டெக் நிறுவனத்தின் ஒரு பங்கு 1382 ரூபாய்க்கு வர்த்தகமானது.