நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச் சி எல் டெக், டைம்ஸ் இதழின் உலகின் தலைசிறந்த நிறுவனங்கள் 2024 பட்டியலில் இடம்பிடித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. இத்துடன், தொழில்முறை சேவைகளுக்கான உலகளாவிய முதல் 10 நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ஹெச் சி எல் டெக் நிறுவனம் ₹4,257 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 20.45% உயர்வாகும். மொத்த வருவாய் ₹28,057 கோடியாக உள்ளது. தற்போது 60 நாடுகளில் 219,000 பேர் ஹெச் சி எல் டெக் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். வருகிற நிதியாண்டில் 3-5% வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, GenAI மற்றும் நிலைத்தன்மை ஆகிய துறைகளில் கவனம் செலுத்த உள்ளது.