ஹெச்டிஎஃப்சி வங்கி காலாண்டு முடிவுகள் வெளியீடு - பங்கு மதிப்பு 3% உயர்வு

April 4, 2024

ஹெச்டிஎஃப்சி வங்கியின் நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் மொத்த வளர்ச்சி வருடாந்திர அடிப்படையில் 55.4% ஆக பதிவாகியுள்ளது. இதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில் எச்டிஎஃப்சி பங்கு மதிப்பு கிட்டத்தட்ட மூன்று சதவீதம் உயர்ந்து வர்த்தகமானது. கடந்த 2023 மார்ச் மாத இறுதியில், ஹெச்டிஎஃப்சி வங்கியின் மொத்த மதிப்பு 16.14 லட்சம் கோடியாக இருந்தது. இது 2024 மார்ச் இறுதியில் 25.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த டிசம்பர் இறுதியில் 24.69 லட்சம் […]

ஹெச்டிஎஃப்சி வங்கியின் நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் மொத்த வளர்ச்சி வருடாந்திர அடிப்படையில் 55.4% ஆக பதிவாகியுள்ளது. இதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில் எச்டிஎஃப்சி பங்கு மதிப்பு கிட்டத்தட்ட மூன்று சதவீதம் உயர்ந்து வர்த்தகமானது.

கடந்த 2023 மார்ச் மாத இறுதியில், ஹெச்டிஎஃப்சி வங்கியின் மொத்த மதிப்பு 16.14 லட்சம் கோடியாக இருந்தது. இது 2024 மார்ச் இறுதியில் 25.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த டிசம்பர் இறுதியில் 24.69 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி, காலாண்டு அடிப்படையில் 1.6% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கியின் கடன் வழங்கல் 108.9% உயர்வை பதிவு செய்துள்ளது. வங்கியின் மொத்த வைப்பு நிதி 26.4% உயர்ந்து 23.8 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சில்லறை வைப்பு நிதி 27.8% மற்றும் மொத்த விலை வைப்பு நிதி 19.4% உயர்வை பதிவு செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu