ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகள் 2 நாட்களில் 12% சரிவு

January 18, 2024

நேற்றைய தினம் இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி பதிவானது. அதன்படி, கடந்த இரு வர்த்தக நாட்களில் மட்டும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் 12% வீழ்ச்சி அடைந்துள்ளன. இதனால், முதலீட்டாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில், ஹெச்டிஎஃப்சி வங்கியின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, வங்கியின் நிதி நிலைமை உயர்ந்தே காணப்படுகிறது. ஆனாலும், பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவால் ஹெச்டிஎஃப்சி […]

நேற்றைய தினம் இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி பதிவானது. அதன்படி, கடந்த இரு வர்த்தக நாட்களில் மட்டும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் 12% வீழ்ச்சி அடைந்துள்ளன. இதனால், முதலீட்டாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில், ஹெச்டிஎஃப்சி வங்கியின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, வங்கியின் நிதி நிலைமை உயர்ந்தே காணப்படுகிறது. ஆனாலும், பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவால் ஹெச்டிஎஃப்சி மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. கொரோனா பரவலுக்கு பிறகு மிகவும் மோசமான வர்த்தக நிலையை ஹெச்டிஎஃப்சி வங்கி எட்டி உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu