மனிதர்களின் வெப்பம் தாங்கும் திறன் குறைந்துள்ளது - ஆய்வுத் தகவல்

September 23, 2024

காலநிலை மாற்றத்தின் காரணமாக தீவிர வெப்பம் அதிகரித்து வருவதால், உலகளாவிய வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகிவிட்டது. அதிகரித்து வரும் வெப்பம் மற்றும் ஈரப்பதம், அனைத்து உயிரினங்களையும் பாதித்து வருகிறது. விலங்குகள் நிழலில் ஒளிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயப் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மனிதர்களின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மனிதர்களால் தாங்க முடிந்த வெப்ப அழுத்தம் 35 டிகிரி செல்சியஸ் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சமீபத்திய ஆய்வொன்று, 31 டிகிரி செல்சியஸ் வெட்-பல்ப் வெப்ப […]

காலநிலை மாற்றத்தின் காரணமாக தீவிர வெப்பம் அதிகரித்து வருவதால், உலகளாவிய வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகிவிட்டது. அதிகரித்து வரும் வெப்பம் மற்றும் ஈரப்பதம், அனைத்து உயிரினங்களையும் பாதித்து வருகிறது. விலங்குகள் நிழலில் ஒளிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயப் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மனிதர்களின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மனிதர்களால் தாங்க முடிந்த வெப்ப அழுத்தம் 35 டிகிரி செல்சியஸ் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சமீபத்திய ஆய்வொன்று, 31 டிகிரி செல்சியஸ் வெட்-பல்ப் வெப்ப அழுத்தம் மனித உடலுக்கு ஆபத்தானது என்று தெரிவிக்கிறது.

அதிக ஈரப்பதம் காரணமாக உடலில் இருந்து வியர்வை வெளியேற முடியாமல் போவதால், உடல் வெப்பம் அதிகரித்து உயிருக்கு ஆபத்து ஏற்படும். முதியவர்கள், குழந்தைகள் மற்றும் வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் போன்றோர் இந்த வெப்ப அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சவுதி அரேபியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த வெப்ப அழுத்தத்தின் தாக்கத்தை அதிகமாக எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளன. - இவ்வாறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu