இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
வட மாநிலங்களில் நிலவி வரும் வரலாறு காணாத வெயிலின் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதில் கடந்த மே 30ஆம் தேதி வடகிழக்கு மாநிலம் ஆன ஒடிசாவில் ஒரே நாளில் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக 42 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் மூன்று நாட்களில் மட்டும் ஹீட் ஸ்ட்ரோக்கால் 99 பேர் உயிரிழந்ததாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. இதுவரை வெயில் காலம் தொடங்கியதில் இருந்து ஒடிசாவில் மட்டும் 141 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் இந்தியாவில் சுமார் 250 பேர் ஹீட் ஸ்டிரோக்கால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது