ஈரானில் கடும் வெப்ப அலை வீசுவதால் அங்குள்ள அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது.
உலக அளவில் காலநிலை மாற்றம் கடும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது ஈரானில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. தலைநகர் தெஹ்ரானில் 107 டிகிரி அளவுக்கு வெயில் உள்ளது. இதனால் 200க்கும் மேற்பட்டவர்கள் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வெப்ப அலை காரணமாக மின்சார நுகர்வு அதிகரித்துள்ளது. எனவே மின்சார ஆற்றலை சேமிக்க அங்குள்ள அரசு, வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மருத்துவமனை உள்ளிட்ட அவசர சேவை நிறுவனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாட்களுக்கு நாடு முழுக்க விடுமுறை விடப்பட்டுள்ளது.