அசாம் மாநிலத்தில் கடும் வெயில் நிலவி வருவதால் 4 நாட்களுக்கு தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.
அசாம் மாநிலம் முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது, அதில் கவுகாத்தி, கச்சார், பார்பேடா போன்ற பகுதிகளில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளதால் மக்கள் கடுமையான சிரமத்தை அனுபவிக்கிறார்கள். இந்த வெப்ப அலைவீச்சின் காரணமாக, மக்கள் மதிய நேரங்களில் வீடுகளை விட்டுப் வெளியே செல்ல முடியாமல் உள்ளனர், இதனால் அவர்களின் வாழ்வியலில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் வானிலை ஆராய்ச்சி மையம், வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கூறியுள்ளது. இதற்கிடையில், கல்வித்துறையினர், கவுகாத்தி உள்ளிட்ட காம்ரூப் மாவட்டத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு 27-ந்தேதி வரை 4 நாட்களுக்கு விடுமுறை அளித்து அறிவித்துள்ளனர்.