டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று புழுதி புயல் காரணமாக பெரும்பாலான பகுதி பாதிப்புக்குள்ளானது.
இந்தியா முழுவதும் கோடை வெயில் 100 டிகிரியை தாண்டி வாடி வதைக்கிறது. இந்த நிலையில் வெப்ப அலை காரணமாக பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதில் கடந்த சில தினங்களாக ஒரு சில இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. அதன்படி தற்போது வானிலை சற்று மாற்றம் அடைந்து வரும் நிலையில் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கடுமையான புழுதிப்புயல் வீசியது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் பாதிப்புக்கு உள்ளானது. மேலும் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும், கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும், மின்சார துண்டிப்பு தொடர்பாகவும் பல்வேறு அழைப்புகள் போலீசாருக்கு வந்துள்ளது