மும்பையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தொடர்ந்து கனமழை பெய்தது.
பொதுவாக ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் மராட்டிய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்திலேயே பருவமழை தொடங்கியது. இருப்பினும் மும்பை போன்ற பகுதிகளை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெரிய அளவு மழை இல்லாத காரணத்தினால் குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது. இந்நிலையில் திடீரென்று மும்பையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் மும்பை மாநகரமே வெள்ளத்தில் சிக்கியுள்ளது. மேலும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வெளியூர்களுக்கு செல்லும் விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன