தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் 13 மாநிலங்களில் இன்று மற்றும் நாளை கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மற்றும் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், தேனி, […]

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் 13 மாநிலங்களில் இன்று மற்றும் நாளை கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மற்றும் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலை பகுதிகள் நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர்,தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்பதாம் தேதி வரை தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட சற்று அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu