இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழைவாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறதுm இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும், அதிலும் குறிப்பாக இன்றும் நாளையும் மிக கனமழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கேரள மாநிலத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது. அங்கு மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களுடன் மொத்தம் ஒன்பது குழுக்கள் கேரளாவிற்கு வந்தடைந்துள்ளன. மேலும் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளன