கேரளாவில் ஒன்பதாம் தேதி வரை கனமழை எச்சரிக்கை

கேரளாவில் வருகிற ஒன்பதாம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனை அடுத்து அங்குள்ள அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வருகிற ஒன்பதாம் தேதி வரை பல மாவட்டங்களில் கன மழை இருக்கும் என வானிலை […]

கேரளாவில் வருகிற ஒன்பதாம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனை அடுத்து அங்குள்ள அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வருகிற ஒன்பதாம் தேதி வரை பல மாவட்டங்களில் கன மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கனமழையால் நகர பகுதிகளில் திடீர் வெள்ளம், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு, தாழ்வான பகுதிகளில் மண்ணரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் எனவும் தொடர்மழை பேரிடர்களுக்கு வழி வகுக்கலாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu