வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பெயர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது ஊட்டி மற்றும் அதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரம் கனமழை பெய்துள்ளது. இதனால் வெள்ளம் சாலைகளில் கரைபுரண்டு ஓடியது. வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
கோத்தகிரி, குந்தா, கெத்தை, பலகொலா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழையின் காரணமாக அங்குள்ள வயல்களில் வெள்ளம் பெருகியது. அங்கு திடீரென அடைப்பு ஏற்பட்டதால் மழை நீர் விளை நிலங்களுக்குள் புகுந்தது. கேரட், பூண்டு, உருளைக்கிழங்கு, பீட்ரூட் உள்ளிட்ட மலை பயிர்களை அங்குள்ள பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டு இருந்தனர். இதனால் இவை அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து ஊராட்சி, நகராட்சி ஊழியர்கள் வயலில் ஏற்பட்ட அடைப்புகளை சரிபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.