கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லியில் 23 ரயில்கள் மற்றும் பல்வேறு விமானங்கள் தாமதமாகி உள்ளன.
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடும் பனி நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லியில் அதிக அளவிலான பனிப்பொழிவு காணப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கினை எரிய விட்டபடி சென்று வருகின்றனர். அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக டெல்லி செல்லும் 23 ரயில்கள் 1 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை தாமதமாக சென்றுள்ளன. இதே போன்று பல்வேறு விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டெல்லியில் உள்ள தெருக்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.