அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி தாக்கத்தால் 116 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அமெரிக்காவை ஹெலன் சூறாவளி புயல் கடந்த வியாழக்கிழமை நெருங்கியது. அதன்பின் புளோரிடா பகுதியில் பலவீனமடைந்து வெள்ளிக்கிழமை கரையை கடந்தது. இதனால் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. மேலும் அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா முழுவதும் பெரிய அழிவை ஏற்படுத்தியது. சூறாவளி மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்து, மரங்கள் முறிந்து விழுந்தன. ஜார்ஜியாவில், சிலர் உயிரிழந்துள்ளனர். அதில் தீயணைப்பு வீரர்களும் உள்ளனர். புளோரிடா, வடக்கு கரோலினா மற்றும் தெற்கு கரோலினா ஆகிய மாகாணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மெக்சிகோவிலும் வெள்ளம் மற்றும் மரங்கள் விழுந்துள்ளன. கியூபாவில் 2 லட்சம் வீடுகள் மின்சார வசதியின்றி உள்ளன. தற்போது, ஹெலன் சூறாவளி தாக்கத்தால் 116 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 20 லட்சம் பேர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.