புனேவில் பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட விமான விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் இன்று காலை 6.45 மணிக்கு, பனிமூட்டம் காரணமாக, பவ்தன் பகுதியில் உள்ள மலையேற்றப் பகுதிக்கு அருகில் ஒரு ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து தீப்பிடித்தது. இதில், ஒரு விமானி மற்றும் இரண்டு இன்ஜினீயர்கள் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டர் என்.சி.பி கட்சிக்கு சொந்தமாக இருப்பதாகவும், புனேயில் இருந்து மும்பைக்கு பயணிக்க வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்கள், நிலைமை குறித்து ஆராய்ந்து வருகின்றனர். மேலும் விபத்து தொடர்பான வீடியோக்கள் வெளிவந்துள்ளன, அவற்றின் மூலம் விபத்தின் விவரங்களை கண்டறிய முயற்சிக்கப்படுகிறது.