ஹீரோ மோட்டோகார்ப் காலாண்டு வருவாய் வரலாற்று உச்சம்

August 14, 2024

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது 40 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக ஒரு காலாண்டில் ரூ.10,000 கோடி வருவாயை தாண்டியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ரூ.10,144 கோடி வருவாயுடன் 16% வளர்ச்சியையும், ரூ.1,123 கோடி லாபத்துடன் 36% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, வாகன விற்பனை 13.45% அதிகரித்து 15.35 லட்சமாக உள்ளது. 125 சிசி பிரிவில் பதிவாகி வரும் வலுவான விற்பனை மற்றும் 70% சந்தைப் பங்கைக் கொண்ட 100/110 […]

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது 40 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக ஒரு காலாண்டில் ரூ.10,000 கோடி வருவாயை தாண்டியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ரூ.10,144 கோடி வருவாயுடன் 16% வளர்ச்சியையும், ரூ.1,123 கோடி லாபத்துடன் 36% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, வாகன விற்பனை 13.45% அதிகரித்து 15.35 லட்சமாக உள்ளது.

125 சிசி பிரிவில் பதிவாகி வரும் வலுவான விற்பனை மற்றும் 70% சந்தைப் பங்கைக் கொண்ட 100/110 சிசி பிரிவில் கிடைத்து வரும் தொடர்ச்சியான வரவேற்பு ஆகியவை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வளர்ச்சியைத் தூண்டியுள்ளது. மின்சார வாகன பிராண்டான விடாவை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் தனது காலாண்டு அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu