ஹீரோ வாகனங்களின் விலை 1500 ரூபாய் வரை உயருகிறது

November 28, 2022

வரும் டிசம்பர் 1ம் தேதி முதல், மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை 1500 ரூபாய் வரை உயர்த்த உள்ளதாக ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், வாகன மாடலுக்கு ஏற்ப, விலைகள் உயர்த்தப்படும் என தெரிவிக்த்துள்ளது. ஹீரோ நிறுவனம், நடப்பு நிதி ஆண்டில், 4வது முறையாக வாகன விலையை உயர்த்தி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நிரஞ்சன் குப்தா, “பண வீக்கத்தை எதிர்கொள்ள இந்த விலை ஏற்றம் […]

வரும் டிசம்பர் 1ம் தேதி முதல், மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை 1500 ரூபாய் வரை உயர்த்த உள்ளதாக ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், வாகன மாடலுக்கு ஏற்ப, விலைகள் உயர்த்தப்படும் என தெரிவிக்த்துள்ளது. ஹீரோ நிறுவனம், நடப்பு நிதி ஆண்டில், 4வது முறையாக வாகன விலையை உயர்த்தி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நிரஞ்சன் குப்தா, “பண வீக்கத்தை எதிர்கொள்ள இந்த விலை ஏற்றம் அவசியமாகிறது. வாடிக்கையாளர்களை பாதிக்காத வண்ணம், இதற்கான புதிய தீர்வு விரைவில் கொண்டு வரப்படும்” எனக் கூறியுள்ளார். முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் 2000 ரூபாய் வரையும், ஜூலை மாதத்தில் 3000 ரூபாய் வரையும், செப்டம்பர் மாதத்தில் 1000 ரூபாய் வரையும் வாகன விலைகள் உயர்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu