10 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளிவரும் ஹீரோ பைக்

August 29, 2023

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து, ஹீரோ நிறுவனத்தின் மிக முக்கிய வாகனமான ஹீரோ கரிஷ்மா வெளியாக உள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிரஞ்சன் குப்தா, ஹீரோ கரிஷ்மா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ‘கரிஷ்மா எக்ஸ் எம் ஆர்’ என்ற பெயரில், மேம்படுத்தப்பட்ட ஹீரோ கரிஷ்மா வாகனம் வெளியாக உள்ளது. இதன் விலை 1.72 லட்சம் என சொல்லப்பட்டுள்ளது. பழைய ஹீரோ கரிஷ்மா வாகனம் 2007 முதல் 2014 வரை சந்தையில் முக்கிய […]

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து, ஹீரோ நிறுவனத்தின் மிக முக்கிய வாகனமான ஹீரோ கரிஷ்மா வெளியாக உள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிரஞ்சன் குப்தா, ஹீரோ கரிஷ்மா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ‘கரிஷ்மா எக்ஸ் எம் ஆர்’ என்ற பெயரில், மேம்படுத்தப்பட்ட ஹீரோ கரிஷ்மா வாகனம் வெளியாக உள்ளது. இதன் விலை 1.72 லட்சம் என சொல்லப்பட்டுள்ளது. பழைய ஹீரோ கரிஷ்மா வாகனம் 2007 முதல் 2014 வரை சந்தையில் முக்கிய இடத்தை ஆக்கிரமித்து இருந்தது. அதன் பிறகு நிறுத்தப்பட்ட இந்த வாகனம், தற்போது புதிய மேம்படுத்தல்களுடன் மீண்டும் வெளியாக உள்ளது. இந்த வாகனத்திற்கும், பழைய கரிஷ்மா வாகனத்தைப் போலவே, இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பல நவீன வசதிகளுடன், மஞ்சள், சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய 3 நிறங்களில் புதிய கரிஷ்மா எக்ஸ் எம் ஆர் வாகனம் வெளியாக உள்ளது. இந்த வாகனத்திற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu